/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை
/
இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை
இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை
இருதரப்பினர் இடையே மோதல் 2 பேர் கைது; 13 பேருக்கு வலை
ADDED : செப் 30, 2025 06:36 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் சதிஷ், 20; என்பவருக்கும், ஆதிதிராவிட பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி ராதாதேவிக்கும் நேற்று முன்தினம் மாலை தகராறு நடந்தது. அப்போது ராதாதேவிக்கு ஆதரவாக வந்த பிரதீப்பை, சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். பதிலுக்கு பிரதீப் தரப்பினர் சதிஷ் உள்ளிட்டோரை தாக்கினர். இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சதிஷ், ராகுல், வினோத், சிவமணி, பாலாஜி, வல்லரசு ஆகிய 6 பேர் மீதும், மற்றொரு தரப்பில் ராதாதேவி, சிபி, ராஜா, இளையராஜா மனைவி ஆரியா, வேல்முருகன், பிரதீப், நீதிதேவன், ராஜா, ரமணா உள்ளிட்ட 9 பேர் மீதும் என மொத்தம் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், சதிஷ், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.