/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை; மணலுார்பேட்டையில் துணிகரம்
/
அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை; மணலுார்பேட்டையில் துணிகரம்
அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை; மணலுார்பேட்டையில் துணிகரம்
அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை; மணலுார்பேட்டையில் துணிகரம்
ADDED : செப் 23, 2024 11:54 PM
திருக்கோவிலுார் ; மணலுார்பேட்டையில் அடுத்தடுத்து 2 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் கர்ணா, 29; திருவண்ணாமலை மெயின் ரோட்டில், ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று காலை 10:00 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க இரும்பு ஷீட் பிரிக்கப்பட்டிருந்தது.
உள்ளே கல்லாவில் இருந்த 5,000 ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போன் கொள்ளை போனது தெரியவந்தது.
இதேபோன்று, ஆற்றுப் பாலம் அருகே, கம்பி கடை நடத்தி வருபவர், அரகண்டநல்லுாரைச் சேர்ந்த நாராயணமூர்த்தி மகன் விக்னேஷ், 29; நேற்று காலை 10:30 மணியளவில் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் ஷீட் பிரிக்கப்பட்டு, கல்லாவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து இருவரும் அளித்த தனித்தனி புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.