/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் ஆடு திருடிய கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
/
சங்கராபுரத்தில் ஆடு திருடிய கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
சங்கராபுரத்தில் ஆடு திருடிய கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
சங்கராபுரத்தில் ஆடு திருடிய கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
ADDED : அக் 28, 2025 06:21 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்திற்கு பைக்கில் இருவர் வந்து, தாங்கள் கேரள மாநிலம், மூணாறில் இருந்து வருவதாகவும், மிளகு தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவை என கேட்டுள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அக்கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் வளர்த்து வந்த 2 ஆடுகளை காணவில்லை.
இதேபோல், மஞ்சபுத்துார் கிராமத்திலும் ஆடுகள் திருடுபோனது. இது குறித்து சங்கராபுரம் போலீ சி ல் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் நடத்திய விசாரணையில், மிளகு தோட்டத்திற்கு ஆட்கள் கேட்ட, இருவரும் ஆடுகளை பைக்கில் திருடி சென்றது தெரியவந்தது. அதையடுத்து, அதே பகுதியில் சுற்றித்திரிந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்த ஆண்டனி, 50; அஜய்குமார், 41; என, தெரிந்தது.
இருவரும் மூன்று மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிக்கு சென்று மூணாறு மிளகு தோட்டத்திற்கு ஆட்கள் தேவை என கூறி அங்கிருந்து ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். ஆடுகள் சத்தம் எழுப்பாமல் இருக்க வாய் பகுதியை பிளாஸ்டிக் டேப் மூலம் கட்டி கொண்டு சென்று, சந்தை அல்லது தனி நபரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

