/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் திருடி விற்கும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது: 6 பேருக்கு வலை
/
பைக் திருடி விற்கும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது: 6 பேருக்கு வலை
பைக் திருடி விற்கும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது: 6 பேருக்கு வலை
பைக் திருடி விற்கும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது: 6 பேருக்கு வலை
ADDED : டிச 18, 2024 05:45 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே பைக்குகளை திருடி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்கல்பூண்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சந்திரன்,19; இவர் பேஸ்புக்கில பைக் விற்பனை விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த எண்ணில், கூத்தனுாரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் மகேந்திரனை நேரில் சந்தித்து, 'யமகா ஆர்15' பைக்கை 40 ஆயிரம் ரூபாய்க்கு சந்திரன் வாங்கினார். அப்போது, ஆர்.சி., புக்கை பிறகு தருவதாக மகேந்திரன் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு சந்திரன் ஆர்.சி., புக்கை கேட்டதற்கு, பாசார் கிராமத்திற்கு நேரில் வருமாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
11ம் தேதி சந்திரன் 'யமகா ஆர்15' பைக்கில் பாசார் கிராமத்திற்கு சென்றார். அங்கு, மகேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் சந்திரனை தாக்கி, அவரிடமிருந்த பைக், மற்றும் 9,000 ரூபாய், மொபைல் போனை பறித்தனர். போலீசுக்கு சென்றால் கொலை செய்துவிடுவோம் என, மிரட்டியுள்ளனர்.
இது குறித்து சந்திரன், ரிஷிவந்தியம் போலீசில் புகார் அளித்தார்.
திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பாசார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக 'யமகா ஆர்15' பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் பாசார் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி, 23; என்பதும், இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பைக்குகளை திருடி விற்பனை செய்வதும் தெரியவந்தது.
மேலும், திருட்டு பைக்கை சந்திரனிடம் விற்று ஆர்.சி., புக் இல்லாததால் அவரை மகேந்திரனுடன் சேர்ந்து தாக்கி பைக்கை பிடுங்கியதும் தெரியவந்தது.
மேலும், பூபதி அளித்த தகவலின் பேரில், பைக் திருடி விற்கும் கும்பலை சேர்ந்த பாசார் கிராமத்தைசேர்ந்த அய்யப்பன், சிவா, மலையனுார் ஆறுமுகம், வெங்கலம் வெற்றி, பிரகாஷ், 19; சீதேவியைச் சேர்ந்த பார்த்திபன், கூத்தனுார் மகேந்திரன் ஆகிய 8 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதில், பூபதி மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், 6 பேரை தேடி வருகின்றனர்.