/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது
/
மணல் கடத்தல் சிறுவன் உட்பட 2 பேர் கைது
ADDED : செப் 22, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் அருகே மணல் ஏற்றிச் சென்ற 2 மாட்டு வண்டிகளை நிறுத்தியபோது மணல் கடத்தி வந்த நபர்கள் தப்பியோடினர்.
அதில், பில்ராம்பட்டைச் சேர்ந்த இளவரசன், 29; அருணாபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து, தப்பியோடிய பில்ராம்பட்டு கிருஷ்ணமூர்த்தி, ராஜி, ஏழுமலை, பரமசிவம், சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.