/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரியில் மண் கடத்தல் நேரில் சென்ற சப் கலெக்டர் 2 பேர் கைது; லாரி ஜே.சி.பி. பறிமுதல்

ADDED : ஆக 31, 2025 04:08 AM
உளுநதுார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அனுமதியின்றி ஏரி மண் கடத்திய டிப்பர் லாரி, ஜே.சி.பி., இயந்திரத்தை சப் கலெக்டர் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
உளுநதுார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் ஏரியிலிருந்து அனுமதியின்றி ஏரி மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் வெகு நேரமாகியும் சம்பவ இடத்திற்கு வராததால் சப்கலெக்டர் ஆனந்த்குமார்சிங்கிற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சப்கலெக்டர் சென்றார். அங்கு, ஏரி மண் கடத்திய டிப்பர் லாரி, ஜே.சி.பி., இயந்திரத்தை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஏரி மண் கடத்திய டிப்பர் லாரி உரிமையாளர் உளுநதுார்பேட்டை பாரிவள்ளல் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராமசாமி, 30; ஜே.சி.பி., டிரைவர் உளுந்துார்பேட்டை நகர் காலனி பகுதியை சேர்ந்த ஆதி மூலம் மகன் அஜித், 27; ஆகியோரை கைது செய்தனர்.
ஏரி மண் கடத்துவோரை பிடிக்காமல் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால், சப் கலெக்டர் நேரடியாக சென்று வாகனங்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.