/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா கடத்தல் 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா கடத்தல் 2 வாலிபர்கள் கைது
ADDED : அக் 21, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் டி.கே.மண்டபம், ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் அவர்கள் 400 கிராம் கஞ்சா வைத்திருந் தது தெரிய வந்தது.
விசாரணையில் உளுந்துார்பேட்டை அடுத்த வாணியமேடு கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் மணியரசு, 19; டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுதர்சன், 22; என தெரிய வந்தது.
உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.