/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் புறவழிச்சாலையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
சின்னசேலம் புறவழிச்சாலையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சின்னசேலம் புறவழிச்சாலையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சின்னசேலம் புறவழிச்சாலையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 23, 2024 03:46 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் புறவழிச்சாலையில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, 2 டன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், போலீசார் ஆறுமுகம், கண்ணன் ஆகியோர் சின்னசேலம் புறவழிச்சாலை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த டிஎன் 51 எம்2758 என்ற பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்-அப் லோடு வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது, வாகனத்தில் இருந்த மூன்று பேரில், இருவர் தப்பினர்.
மீதமிருந்த ஒருவருடன் வாகனத்தை சோதனை செய்த போது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிந்தது.
இது தொடர்பான விசாரணையில், தப்பிய இருவர் செந்தில், பூபதி என்பதும், பிடிபட்ட நபர் நாமக்கல் மாவட்டம், கலங்கனியை சேர்ந்த கொண்டப்பன் மகன் மாதேஸ்வரன்,32; என்பதும் தெரிந்தது. மூன்று பேரும் சேர்ந்து பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி, அதை நாமக்கல் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரிந்தது.
தொடர்ந்து, மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, அதில் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலா 50 கிலோ வீதம் 42 சாக்கு மூட்டைகளில் இருந்த 2,100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மகேந்திரா லோடு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.