/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை
/
2 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 19, 2025 01:05 AM
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் வெவ்வேறு பகுதியை சேர்ந்த இரு பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேரை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் புனிதா,18; இவர் தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 16ம் தேதி காலை வழக்கம் போல கல்லுாரிக்கு சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல, நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகள் சுபாஷினி,19; பிளஸ் 2 முடித்து விட்டு, மேற்படிப்பிற்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டனர்.
கடந்த 15ம் தேதி இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டு துாங்க சென்றவர், அடுத்த நாள் காணாமல் போனார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.