sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலம் அருகே 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்

/

சின்னசேலம் அருகே 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்

சின்னசேலம் அருகே 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்

சின்னசேலம் அருகே 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்


ADDED : நவ 29, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 29, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: வினைதீர்தாபுரம் கிராமத்தில் 20 சவரன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

சின்னசேலம் அடுத்த வினைதீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி சுகந்தி 34, இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். ஐயப்பன் சுகந்தி தம்பதியருக்கு 12, மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகள் படிப்பதற்காக சுகந்தி கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

இந்நிலையில் வினைதீர்த்தாபுரத்தில் உள்ள சுகந்தி வீட்டின் கதவுகள் உடைக்கபட்டுள்ளதாக நேற்று முன்னதின அதிகாலை 6 மணியளவில் அருகிலிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது சுகந்தியின் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us