/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலணி தொழிற்சாலையில் 20 ஆயிரம் பேருக்கு வேலை
/
காலணி தொழிற்சாலையில் 20 ஆயிரம் பேருக்கு வேலை
ADDED : ஏப் 21, 2025 05:43 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் கட்டப்பட்டு வரும் காலணி தொழிற்சாலையில், 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திகுறிப்பு :
உளுந்துார்பேட்டை, சிப்காட் தொழிற்பூங்காவில் 2 ஆயிரத்து 302 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் 'பவுசென்' காலணி உற்பத்தி புதிய ஆலை விரைவில் செயல்பட உள்ளது.
இந்த தொழிற்சாலையில் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர, காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும்.
இதற்காக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்படும், மத்திய காலணி நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
இந்த பயிற்சி நிறுவனத்தில், 2025-26 ம் ஆண்டு சேருவதற்கான தொழிற்கல்வி சேர்க்கை அறிவிப்பு
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள இளைஞர்கள் அதற்கான சேர்க்கை விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பயன் பெறலாம்.
விண்ணப்பதாரர்கள், 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.அதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் வரும், 25ம் தேதிவரை கலெக்டர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சேகர் ஆகியோரின் மொபைல் எண்களில், 96779 43633, 96779 43733, தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரைவில் உளுந்தூர்பேட்டையில் செயல்பட உள்ள காலணி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

