/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : செப் 21, 2024 05:36 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சத்தியசீலன் ரிஷிவந்தியத்திற்கும், வரஞ்சரம் மாணிக்கம் சின்னசேலத்திற்கும், திருநாவலுார் ஆனந்தராசு கச்சிராயபாளையத்திற்கும், சின்னசேலம் நரசிம்மஜோதி உளுந்துார்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தியாகதுருகம் செல்வம் திருக்கோவிலுாருக்கும், உளுந்துார்பேட்டை அன்பழகன் திருக்கோவிலுாருக்கும், பகண்டைகூட்ரோடு சூர்யா சின்னசேலத்திற்கும், கீழ்குப்பம் பிரபாகரன் எலவனாசூர்கோட்டைக்கும், திருப்பாலபந்தல் தனசேகர் சங்கராபுரத்திற்கும், மணலுார்பேட்டை துர்காதேவி எலவனாசூர்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த ஜெயமணி தியாகதுருகத்திற்கும், கள்ளக்குறிச்சி கனகவள்ளி திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கச்சிராயபாளையம் கார்த்தி எடைக்கல்லுக்கும், எலவனாசூர்கோட்டை ஹரிகிருஷ்ணன், சேட்டு முறையே கீழ்குப்பம், பகண்டைகூட்ரோட்டிற்கும், எடைக்கல் பிரபாகரன் திருநாவலுாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வடபொன்பரப்பி சாமிநாதன் மணலுார்பேட்டைக்கும், வரஞ்சரம் ஜெகதீசன் கச்சிராயபாளையத்திற்கும், திருநாவலுார் பிரபு சங்கராபுரத்திற்கும், ரிஷிவந்தியம் ஞானசேகர் தியாகதுருகத்திற்கும், தியாகதுருகம் சபரிமலை கச்சிராயபாளையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை எஸ்.பி., ரஜத்சதுர்வேதி வெளியிட்டுள்ளார்.