/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிட்டோஜாக் சார்பில் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 211 பேர் கைது
/
டிட்டோஜாக் சார்பில் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 211 பேர் கைது
டிட்டோஜாக் சார்பில் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 211 பேர் கைது
டிட்டோஜாக் சார்பில் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 211 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2025 02:48 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோஜாக் குழுவைச் சேர்ந்த 211 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் புஷ்பராஜ், மனோகரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஷேக் ஜாகீர் உசேன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சூரியகுமார், தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராசு முன்னிலை வகித்தனர். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் லட்சுமிபதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, காலை 11.15 மணிக்கு, கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 91 பெண்கள் உட்பட 211 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.