ADDED : செப் 24, 2026 03:23 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் போக்குவரத்து விதி மீறிய 22 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் குறிப்பாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டிய உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 22 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
