/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 234 பேர் கைது
/
தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 234 பேர் கைது
தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 234 பேர் கைது
தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் 234 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 04:50 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த 234 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து சங்கராபுரம் சாலையில் நடந்து சென்று, இந்தியன் வங்கி அருகே மறியலில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், தேசிய குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயித்தல், திருத்திய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறுதல், முன்பணம் செலுத்தி மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த கூடாது.100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, அதற்கு ஊதியமாக ரூ.600 வழங்குதல், விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தினை மானிய விலையில் வழங்குதல், பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 134 பெண்கள் உட்பட 234 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.
மேலும், சின்னசேலம், நைனார்பாளையம், வேங்கைவாடி உட்பட மாவட்டம் முழுதும் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.