/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் குருப் 4 தேர்வு 23,949 பேர் பங்கேற்பு; 4,262 பேர் ஆப்சென்ட்

ADDED : ஜூலை 12, 2025 11:22 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த குருப் 4 தேர்வில் 23,949 பங்கேற்று தேர்வு எழுதினர். 4,262 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 97 தேர்வுக் மையங்களில், 28,211 பேர் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று காலை தேர்வு துவங்கியது. கள்ளக்குறிச்சி வட்டத்தில், 37 தேர்வு மையங்களில் 10,690 பேர், சின்னசேலம் வட்டத்தில் 3,754 பேர், திருக்கோவிலுாரில் 14 தேர்வு மையத்த்தில் 4,223 பேர், உளுந்துார்பேட்டை வட்டம் 16 தேர்வுக் மையத்தில் 4,786 பேர், சங்கராபுரம் வட்டம் 14 தேர்வு மையத்தில் 4,029 பேர், வாணாபுரம் வட்டம் 3 தேர்வு மையத்தில் 729 பேர் என மொத்தம் 23,949 பேர் தேர்வு எழுதினர். 4,262 நபர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
தேர்வை கண்காணிக்க 30 மொபைல் யூனிட், 102 போலீஸ் அலுவலர்கள், 97 கண்காணிப்பு அலுவலர்கள், 10 பறக்கும் படை கண்காணிப்பு அலுவலர்கள், 102 ஒளிப்படப் பதிவாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்வுகள் கண்காணிக்கப்பட்டது.
கனியாமூர் சக்தி பள்ளி மற்றும் இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லூரி ஆகிய இரு தேர்வு மையங்களில் இத்தேர்வினை கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு செல்ல பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.