/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27.83 மி.மீ., மழை
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27.83 மி.மீ., மழை
ADDED : ஆக 12, 2025 02:03 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 27.83 மி.மீ., அளவு மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து மழை பெய்ய துவங்கியது. ஒரு சில இடங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது.
இதில் கள்ளக்குறிச்சியில் 24 மி.மீ., அளவு மழை பதிவானது. அதுபோல், தியாகதுருகம் 40, விருகாவூர் 50, கச்சிராயபாளையம் 10, கோமுகி அணை 31, மூரார்பாளையம் 28, வடசிறுவள்ளூர் 32, கடுவனுார் 32, மூங்கில்துறைப்பட்டு 4, அரியலுார் 39, சூளாங்குறிச்சி 36, ரிஷிவந்தியம் 25, கீழ்பாடி 27, கலையநல்லுார் 48, மணலுார்பேட்டை 5, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 24, வாணாபுரம் 41, மாடாம்பூண்டி 33, திருக்கோவிலுார் (வடக்கு) 9, திருப்பாலபந்தல் 20, வேங்கூர் 39, பிள்ளையார்குப்பம் 28, எறையூர் 19, உ.கீரனுார் 24 என மாவட்டம் முழுவதும் 668 மி.மீ., அளவிலும், சராசரியாக 27.83 மி.மீ., அளவு மழை பதிவானது.