ADDED : செப் 18, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதி மீறிய 28 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 28 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
