/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் சாலை மறியல் மாவட்டத்தில் 282 பேர் கைது
/
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் சாலை மறியல் மாவட்டத்தில் 282 பேர் கைது
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் சாலை மறியல் மாவட்டத்தில் 282 பேர் கைது
மாற்றுத்திறனாளி சங்கத்தினர் சாலை மறியல் மாவட்டத்தில் 282 பேர் கைது
ADDED : ஜன 22, 2025 09:40 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் 282 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேலு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.6 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10 ஆயிரமாகவும், படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுத்தல், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் கச்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 125 பெண்கள் உட்பட 220 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.