/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாத்தனுாரில் இருந்து 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
/
சாத்தனுாரில் இருந்து 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
சாத்தனுாரில் இருந்து 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
சாத்தனுாரில் இருந்து 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
ADDED : மார் 18, 2024 06:02 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் இரண்டாம் போக சாகுபடிக்காக சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
திருக்கோவிலுார் பழைய ஆயக்கட்டு விவசாயிகளின் இரண்டாம் போக சாகுபடிக்காக கடந்த 15ம் தேதி காலை 8:00 மணிக்கு சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 900 கன அடி வீதம் வரும் 29ம் தேதி வரை 14 நாட்களுக்கு தொடர்ந்து 1088.64 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இரண்டாம் தவணையாக 30 மற்றும் 31 தேதிகளில் வினாடிக்கு 600 கன அடி வீதம் 51.84 மில்லியன் கனஅடியும், ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி வினாடிக்கு 688 கன அடி வீதம் 59.52 மில்லியன் கன அடியும், மொத்தம் 1200 மில்லியன் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது.
இந்த தண்ணீர் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து ராகவன் வாய்க்கால், மலட்டாறு, பம்பை வாய்க்கால்களில் திருப்பி விடப்படுகிறது.
இதன் மூலம் திருக்கோவிலுார் பழைய ஆயகட்டு பாசனத்தைச் சேர்ந்த 5,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் இரண்டாம் போக பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

