ADDED : ஜன 30, 2026 07:19 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: நாகுப்பம் கிராமத்தில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த நாகுப்பம் கிராமத்தில் நாகாத்தம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 1:00 மணி அளவில் பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி மகன் வெங்கடேசன், 30; முருகேசன் மகன் யாகவன், 18, குருநாதன் மகன் குருமூர்த்தி, 19; ஆகியோர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த 2,800 ரூபாயை திருடி சென்றனர்.
அதேபோல் அருகில் இருந்த ஜவுளி கடையின் பூட்டை உடைத்து 400 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.
இது குறித்த புகாரில் வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் வெங்கடேசன், யாகவன், குருமூர்த்தி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
