உறவினர்களுக்கும் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
உறவினர்களுக்கும் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 18, 2026 08:03 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கோழித் தகராறில் வாலிபரைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பூவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 68; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் இவரது சகோதரர் கோவிந்தன், 65; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் மதியம் அண்ணாமலை வளர்க்கும் கோழிகள் கோவிந்தன் வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் கோவிந்தன் மனைவி மினிச்சி, 56; திட்டியுள்ளார்.
இதனை அறிந்த அண்ணாமலையின் மகன் ராஜாராம், 28; தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் மகன் தாமோதரன், 31; கட்டையால் ராஜாராமை தாக்கினார். படுகாயமடைந்த ராஜாராம் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராஜாராம் கொடுத்த புகாரின் பேரில் களமருதுார் போலீசார் தாமோதரன், கோவிந்தன், மினிச்சி ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
