ADDED : டிச 27, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால், 2 கூரை வீடுகள், ஒரு ஓட்டு வீடு சேதமடைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதில், கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரை சேர்ந்த நாராயணன் மகன் அண்ணாமலை என்பவரது கன்று குட்டி உயிரிழந்தது. அதேபோல், சின்னசேலம் அடுத்த தாவடிப்பட்டை சேர்ந்த ராமு மனைவி பாஞ்சாலை, உளுந்துார்பேட்டை அடுத்த செம்மனங்கூரை சேர்ந்த நடேசன் மகன் ராஜேந்திரன் ஆகியோரது கூரைவீடுகளும், செம்மனங்கூரை சேர்ந்த வீரன் மனைவி மல்லிகா என்பவரது ஓட்டு வீடும் சேதமடைந்தது. மேலும், மின்னல் தாக்கியதில் உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியை சேர்ந்த பெரியநாயகம் மகன் ஆனந்த் அமல்ராஜ்,28; என்பவர் உயிரிழந்தார்.

