ஏரியில் மண் எடுத்த 3 பேர் கைது: 3 ஜே.சி.பி., 2 டிராக்டர் டிப்பர் பறிமுதல்
ஏரியில் மண் எடுத்த 3 பேர் கைது: 3 ஜே.சி.பி., 2 டிராக்டர் டிப்பர் பறிமுதல்
UPDATED : செப் 26, 2026 04:24 PM
ADDED : செப் 26, 2026 04:21 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அனுமதியின்றி ஏரியில் மண் எடுக்க பயன்படுத்திய 3 ஜே.சி.பி., 2 டிராக்டர் டிப்பர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரம், கட்டந்தல் ஏரியில் அரசு அனுமதியின்றி ஜே.சி.பி., மூலம் மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் மணி பாரதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு 3 ஜே.சி.பி., மூலம், 2 டிராக்டர் டிப்பர்களின் கிராவல் மண் அள்ளியவர்களிடம் விசாரித்ததில், அனுமதி இன்றி மண் எடுத்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, சோழவாண்டியபுரம் குணசேகரன் மகன் சிலம்பரசன், 38; கோவிந்தன் மகன் புகழேந்தி, 22; பாடியந்தல் முனியன் மகன் கார்த்திக், 24; ஆறுமுகம் மகன் மகாதேவன், 28; சிறுவாங்கூர் சின்னத்தம்பி மகன் தமிழ்வாணன், 33; ஆகிய 5 பேரை கைது செய்து, 3 ஜே.சி.பி., மற்றும் 2 டிராக்டர் டிப்பர்களை பறிமுதல் செய்தனர்.
