/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
/
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
ADDED : ஏப் 27, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு  :மூங்கில்துறைப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுாரில், நேற்று வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த பகுதி, ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தவர்களை சோதனை செய்தனர். அதில் மூன்று பேரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள் மணலுார் காலனியை சேர்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ், 19; மைக்கேல்புரம் மாணிக்கம் மகன் அபிஷேக்,21; மேல் சிறுவலுார், ரஹ்மத் அலி மகன் பீர், 19; என தெரியவந்தது. இந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

