/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவிலில் திருடிய 3 பேர் கைது திருநாவலுாரில் பரபரப்பு
/
கோவிலில் திருடிய 3 பேர் கைது திருநாவலுாரில் பரபரப்பு
கோவிலில் திருடிய 3 பேர் கைது திருநாவலுாரில் பரபரப்பு
கோவிலில் திருடிய 3 பேர் கைது திருநாவலுாரில் பரபரப்பு
ADDED : டிச 18, 2024 05:46 AM

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் கோவிலில் இரும்பு மற்றும் மர பொருட்கள் திருடி விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனரமைப்பினபோது கோவிலில் இருந்த பழைய இரும்பு மற்றும் மர பொருட்களை கோவில் வளாகத்தில் உள்ள அறையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் இருந்த இந்த பொருட்களை, டிராக்டரில் எடுத்து சென்று பு.மாம்பாக்கம் பகுதியில் உள்ள இரும்பு கடையில் விற்றுள்ளனர்.
இதனையறிந்த கிராம மக்கள் இரண்டாவது லோடு டிராக்டரில் ஏற்றும்போது மடக்கி சிறை பிடித்தனர்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா நேற்று அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து அறநிலையத்துறை உதவியாளர் திருநாவலுார் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லோகேஸ்வரன், 30; கோவில் வாட்ச்மேன் பரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால், 56, டிராக்டர் டிரைவர் திருநாவலுார் பாண்டியன், 43; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.