ADDED : டிச 20, 2024 06:07 AM

சின்னசேலம்: வி.மாமந்துார் கிராமத்தில், ஆடுகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வி.மாமந்துார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் 4 ஆடுகள் இருந்தன. காரில் வந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த சுங்கம்பட்டி அழகப்பன், 55; முள்ளிக்கம்பட்டி முத்துராயர், 36; திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்த சோலார்பேட்டை சுரேஷ், 33; என்பதும் தெரியவந்தது.
இவர்கள் புதுக்கோட்டையில் இருந்து தொழுதுார் வழியாக காரில் வரும் போது, வடகராம்பூண்டியில் 2 ஆடுகளும், கொரக்கவாடி மற்றும் வி.மாமந்துார் கிராமங்களில் 2 ஆடுகளையும் திருடி வந்தது தெரிந்தது. மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, ஆடுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.