/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் ஒரே நாளில் சிறுவன் உட்பட 3 பேர் மாயம்
/
சங்கராபுரத்தில் ஒரே நாளில் சிறுவன் உட்பட 3 பேர் மாயம்
சங்கராபுரத்தில் ஒரே நாளில் சிறுவன் உட்பட 3 பேர் மாயம்
சங்கராபுரத்தில் ஒரே நாளில் சிறுவன் உட்பட 3 பேர் மாயம்
ADDED : ஜன 20, 2025 04:14 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஒரே நாளில் காணாமல் போன இளம் பெண் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துக்கமுத்து மகன் வெங்கடேசன்,40; இவரது மனைவி பிரியா,30; இவர்களுக்கு சிவா,13; தர்சன்,10; ஆகிய இரு மகன்கள்உள்ளனர்.
வெங்கடேசன் பெங்களுரில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த பிரியா மற்றும் இளைய மகன் தர்சனை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. தகவலறிந்த வெங்கடேசன், பெங்களூருவில் இருந்து வந்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இளம் பெண் மாயம்
சங்கராபுரம் அடுத்த ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் குமார். டிரைவர். இவரது இளைய மகள் ேஹமலதா,17; வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறன் கொண்ட இவர் 10ம் வகுப்புவரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் ேஹமலதா நேற்று முன்தினம் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகார்களின் பேரில் சங்கராபுரம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து, விசாரித்துவருகின்றனர்.