/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை அருகே கார் விபத்து இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் படுகாயம்

ADDED : செப் 05, 2025 03:32 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை இன்ஸ்பெக்டர் இளவரசன், 52; புள்ளியல் துறை ஆய்வாளர் இளையராஜா, போலீஸ்காரர் சீதா ராமன் ஆகியோர் விழுப்புரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று, நேற்று மாலை பொலிரோ காரில் கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கா ரை சீதாராமன் ஓட்டிச்சென்றார். உளுந்துார் பேட்டை அடுத்த சேந்தமங்கலம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவி ழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த இளவரசன், இளையராஜா, சீதாராமன் ஆகிய மூவர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் மூவ ரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்துார் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநாவலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.