/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைவோர்.... 3,078 பேர் 3,078 பேர்
/
புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைவோர்.... 3,078 பேர் 3,078 பேர்
புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைவோர்.... 3,078 பேர் 3,078 பேர்
புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைவோர்.... 3,078 பேர் 3,078 பேர்
ADDED : ஆக 21, 2024 06:57 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் இதுவரை 3,078 மாணவிகள் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி துவங்கியது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும் மாதம் 1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இலவச கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் 6 முதல் 8ம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இருந்தாலும் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும்.
கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ஐ.டி.ஐ., இளநிலை உயர்கல்வி ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் படிப்பிற்க்கான உதவித்தொகையாக மாதம்தோறும் வழங்கப்படுகிறது.
மேலும் கல்லுாரியில் சென்று பயிலும் மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவிதொகை பெறலாம்.
அஞ்சல் வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறும் மாணவிகளும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தில் பதிவு செய்ய புதிய யு.எம்.ஐ.எஸ்., இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாணவிகள் பயன்பெற தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனங்களிலேயே யு.எம்.ஐ.எஸ்., இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும் மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு அவசியமாகும்.
இத்திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 3,078 உயர்கல்வி பயிலும் மாணவியர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். எனவே, இத்திட்டத்தினை அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளும் பயன்படுத்தி பயனடையலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.