/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 33 பேர் கைது
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 33 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 33 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 33 பேர் கைது
ADDED : டிச 23, 2024 10:56 PM

ரிஷிவந்தியம்:வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெபக்கூடத்தை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ராமராஜன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல், புதுவை கோட்ட செயலாளர் முருகையன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வம், பாவாடை, ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 33 பேர் அனுமதியின்றி கட்டிய ஜெபக்கூடத்தை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டபடி பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்புக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
அவர்ககளை இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சுமதி தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.