/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 3 மாதத்தில் நாய் கடியால் பாதித்தோர் 3,593 பேர்! கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படுமா?
/
மாவட்டத்தில் 3 மாதத்தில் நாய் கடியால் பாதித்தோர் 3,593 பேர்! கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படுமா?
மாவட்டத்தில் 3 மாதத்தில் நாய் கடியால் பாதித்தோர் 3,593 பேர்! கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படுமா?
மாவட்டத்தில் 3 மாதத்தில் நாய் கடியால் பாதித்தோர் 3,593 பேர்! கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படுமா?
ADDED : ஜன 20, 2025 11:47 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. . தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் ஆங்காங்கே கொட்டப்படும் மீத உணவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சாப்பிடுகிறது. நாய்களின் எண்ணிக்கைகேற்ப அவற்றிற்கு உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் பசியுடன் திரியும் நாய்கள் தெருக்களில் நடந்து அல்லது பைக்கில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது.
நாய்கள் துரத்துவதால் அச்சமடையும் மக்கள் வேகமாக ஓடும் போதும், பைக்கில் செல்லும் போதும் தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
ஒரு சில நாய்கள் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட விலங்குகளை கடித்து குதறுகிறது. நாய்கள் சண்டை போட்டுக்கொள்வதில் சில நாய்களுக்கு 'ரேபிஸ்' எனப்படும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. அவ்வாறு வெறி பிடித்த நாய்கள் பொதுமக்கள், சிறுவர்களை கடிப்பதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் அதிகாலை நடைபயற்சி செல்பவர்கள் பாதுகாப்புக்காக கையில் குச்சியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆண் நாய்களுக்கு கருத்தடையும், பெண் நாய்களுக்கு கர்ப்ப பை அகற்றுதல் சிகிச்சையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு சிகிச்சை செய்த நாய்களை 3 -4 நாட்கள் கண்காணித்து, வெறி நோய் தடுப்பூசியும் செலுத்தி, பிடித்த இடத்திலேயே மீண்டும் விட வேண்டும்.
இதற்காக தமிழக அரசு அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்கிறது.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடந்த அக்., மாதத்தில் இருந்து நேற்று முன்தினம் வரை 3,593 பேர் நாய் கடிக்காக அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நிரந்தர கருத்தடை சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.