/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை மறியல் வி.சி.,யினர் 37 பேர் கைது
/
சாலை மறியல் வி.சி.,யினர் 37 பேர் கைது
ADDED : டிச 20, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட வி.சி.,, கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
பஸ் நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வி.சி., கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொகுதி துணைச் செயலாளர் லெனின் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் வசந்தன், பொருளாளர் தீந்தமிழன், ஒன்றிய பொருளாளர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர் பூசைமணி, நகர துணை செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் மறியலுக்கு அனுமதியில்லை எனக்கூறி 37 பேரை கைது செய்தனர்.