/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.05 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.05 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.05 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.05 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜன 09, 2024 01:20 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 37.05 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சிமார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் 350 மூட்டை, உளுந்து 290, வேர்க்கடலை 15, நாட்டு கம்பு 4, எச்.பி., கம்பு 2, எள் ஒரு மூட்டை என 150 விவசாயிகள் 662 மூட்டை விளைபொருட்களை நேற்று கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 1992 ரூபாய்க்கும், உளுந்து 9,266, வேர்க்கடலை 6,990, நாட்டு கம்பு 5,978, எச்.பி., கம்பு 2,800, எள் 9,699 ரூபாய்க்கு என 37 லட்சத்து 5000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 14 விவசாயிகள் 245 மூட்டை மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,260 ரூபாய்க்கு என5 லட்சத்து 51 ஆயிரத்து 950க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம்
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் 93 விவசாயிகள் 344 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். நெல் 116 மூட்டை, உளுந்து 160, மக்காச்சோளம் 66, பச்சைப் பயறு 3, தலா ஒரு மூட்டை கம்பு, தட்டைப்பயறு உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை நெல் 2,893 ரூபாய், உளுந்து 9,540, மக்காச்சோளம் 2,126, பச்சைப்பயறு 8,600, கம்பு 6,389, தட்டைப்பயிறு 6,289 ரூபாய்க்கு என19 லட்சத்து 1,016 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.