/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 374 மனுக்கள் குவிந்தன
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 374 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜூலை 22, 2025 06:41 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 374 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 374 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.