/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் மருந்தகங்கள் மூலம் 3,848 பேர் பயனடைந்துள்ளனர்
/
முதல்வர் மருந்தகங்கள் மூலம் 3,848 பேர் பயனடைந்துள்ளனர்
முதல்வர் மருந்தகங்கள் மூலம் 3,848 பேர் பயனடைந்துள்ளனர்
முதல்வர் மருந்தகங்கள் மூலம் 3,848 பேர் பயனடைந்துள்ளனர்
ADDED : ஏப் 08, 2025 06:34 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 15 முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வாணாபுரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, வடக்கனந்தல், கே.ஆலத்துார், மணலுார்பேட்டை, எலவனாசூர்கோட்டை ஆகிய 7 இடங்களில் கூட்டுறவு துறை மூலம் இயங்கி வருகிறது. மேலும், தொழில் முனைவோரால் பெரிய கொள்ளியூர், காராம்பாளையம், ஈயனுார், ஈருடையாம்பட்டு, தியாகதுருகம், அசகளத்துார், வெட்டிபெருமாளகரம், பைத்தந்துறை ஆகிய 8 இடங்கள் என மொத்தம் 15 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தரமான மருந்து மாத்திரைகளை குறைவான விலையில் வழங்குவதே முதல்வர் மருந்தகத்தின் முக்கிய நோக்கமாகும். மருந்தகத்தில் 25 முதல் 90 சதவீதம் வரை மருந்து மாத்திரைகளின் அடக்கவிலையில் தள்ளுபடி செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மருந்தகங்கள் மூலம் கடந்த பிப்ரவரி 24 முதல் கடந்த 4ம் தேதிவரை 2.18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு, 50 ஆயிரத்து 733 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 3,848 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.