/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
38,728 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : கலெக்டர் தகவல்
/
38,728 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : கலெக்டர் தகவல்
38,728 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : கலெக்டர் தகவல்
38,728 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 25, 2025 08:12 AM
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் 23 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலமாக 38,728 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2024-25ம் பருவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சன்ன ரக நெல் ஒரு குவின்டாலுக்கு ஆதார விலையாக ரூ.2,450; பொது ரக நெல் ஒரு குவின்டாலுக்கு ரூ.2,405; என வழங்கப்படுகிறது.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலமாக கடந்த, 15ம் தேதி வரை சன்ன ரக நெல் 32,963 மெட்ரிக் டன்; பொது ரக நெல் 5,765 மெட்ரிக் டன்; என மொத்தம், 38 ஆயிரத்து 728 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகை ரூ. 92.10 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக 6,496 விவசாயிகள் பயனடைந்தனர். கடந்த ஆண்டை விட நடப்பு பருவத்தில், 21 ஆயிரத்து 726 மெட்ரிக் டன் நெல் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை மற்றும் கழக அரவை முகவர்களின் நவீன அரிசி ஆலைகள் மூலமாக அரவைக்கு அனுப்பப்படுகிறது.
தொடர்ந்து பெறப்படும் அரிசி பொது வினியோக திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.