/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாலிபரை தாக்கிய 4 பேருக்கு வலை
/
வாலிபரை தாக்கிய 4 பேருக்கு வலை
ADDED : ஜன 20, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்; வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பேரால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முருகன்,22; இவர் கடந்த 18 ம் தேதி பாவந்துார் கிராமத்தில் இருந்து பேராலுக்கு சென்று கொண்டிருந்தார்.
சாத்தபுத்தூர் முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் கலைமணி,19; மற்றும் சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து முருகனை தடுத்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர். இதில் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார், வழக்கு பதிந்து கலைமணி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.