தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா விற்ற 4 பேர் கைது

 கஞ்சா விற்ற 4 பேர் கைது

 கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : ஜூன் 08, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று காலை 7:00 மணிக்கு விளாந்தாங்கல் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் போலீ சாரை கண்டது ம் தப்பியோடினர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில், கள்ளக்குறிச்சி செக்குமேட்டு தெரு ஜீவானந்தன் மகன் வினோத், 22; சிவன் கோவில் தெரு பாலமுருகன் மகன் அபாஷ், 24; சிதம்பரம் பிள்ளை தெரு மாரிமுத்து மகன் மனோகர், 22; கே.பி.ஆர்., நகர் சேர்ந்த பிரதாப் மகன் அஸ்வந்த், 20; என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

அதையடுத்து, நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 750 கிராம் கஞ்சா மற்றும் 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய பிரவீன், சரவணன், ரிதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us