/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை; சின்னசேலம் பகுதியில் மக்கள் பீதி
/
ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை; சின்னசேலம் பகுதியில் மக்கள் பீதி
ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை; சின்னசேலம் பகுதியில் மக்கள் பீதி
ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை; சின்னசேலம் பகுதியில் மக்கள் பீதி
ADDED : மார் 08, 2024 12:06 PM
கள்ளக்குறிச்சி : பங்காரம் கிராமத்தில் ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 48; நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் 2 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், அருகே உள்ள சிந்தாமணி, 75; என்பவரது வீட்டில் 4,000 ரூபாயையும், அதே பகுதியில் சின்னசாமி, 85; சுந்தர் ஆகியோரது வீடுகளிலும் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஏதும் கிடைக்காததால் வெறும் கையுடன் சென்றுள்ளனர்.
தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடவியல் பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே இரவில் நான்கு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதிமக்களை பீதியடைச் செய்துள்ளது.