/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காணாமல் போன 4 சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
/
காணாமல் போன 4 சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
காணாமல் போன 4 சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
காணாமல் போன 4 சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
ADDED : பிப் 20, 2024 05:24 AM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே காணாமல்போன 4 சிறுவர்களை போலீசார் மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவர்கள் நான்கு பேர், கடந்த 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகார்களின் பேரில் டி.எஸ்.பி., ரமேஷ் மேற்பார்வையில், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுமதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், சென்னை, வியாசர்பாடியில் தங்கியிருந்த 4 சிறுவர்களையும் மீட்டு விசாரித்தனர். அதில், சரியாக படிக்காததை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து 4 சிறுவர்களையும் தியாகதுருகம் அழைத்து வந்து நேற்று அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

