/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரஞ்சரம் வாடகை வீட்டில் குட்கா குடோன் 2 பெண் உட்பட 4 பேர் கைது; 144 கிலோ பறிமுதல்
/
வரஞ்சரம் வாடகை வீட்டில் குட்கா குடோன் 2 பெண் உட்பட 4 பேர் கைது; 144 கிலோ பறிமுதல்
வரஞ்சரம் வாடகை வீட்டில் குட்கா குடோன் 2 பெண் உட்பட 4 பேர் கைது; 144 கிலோ பறிமுதல்
வரஞ்சரம் வாடகை வீட்டில் குட்கா குடோன் 2 பெண் உட்பட 4 பேர் கைது; 144 கிலோ பறிமுதல்
ADDED : ஜூலை 12, 2025 03:41 AM

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே வாடகை கட்டடத்தில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் அடுத்த நின்னையூர் கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நின்னையூரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெங்கடேசன் மனைவி பூமாதேவி, 28; என்பவரது மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி சந்திரலேகா, 33; என்பவர், நின்னையூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் பரசுராமன், 29; என்பவரது கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், உளுந்துார்பேட்டை அடுத்த பாளையகுஞ்சரம் பகுதியை சேர்ந்த ஷேக்தாவூத் மகன் ஷேக்ஜாபர்,36; என்பவர், சங்கராபுரம் வீட்டில் இருந்து ஆட்டோக்கள் மூலம் குட்கா பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பூமா தேவி, பரசுராமன், சந்திரலேகா மற்றும் ஷேக்ஜாபர்ஆகிய 4 பேரையும் வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர். நால்வரிடம் இருந்து, ரூ. 1.14 லட்சம் மதிப்புள்ள, 144 கிலோ 600 கிராம் எடை கொண்ட ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களையும், ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.