/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது
/
தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது
தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது
தியாகதுருகம் அருகே வழிப்பறி திருநங்கை உட்பட 4 பேர் கைது
ADDED : அக் 06, 2024 04:43 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே செங்கல் வியாபாரியிடம் வழிப்பறி செய்த திருநங்கை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த புக்குளம் காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் பழனியப்பன், 44; செங்கல் வியாபாரி.
இவர் கடந்த 22ம் தேதி வரதப்பனுாரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
வீரசோழபுரம் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே பைக்கில் வந்த 3 பேர் பழனியப்பனை வழிமறித்து கொடுவாளை காட்டி மிரட்டி 30 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.
புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட வாணியந்தல் தனசேகரன் மகன் அய்யனார், 19; ரோடுமாமந்துார ராமன் மகன் நரசிம்மா, 21; அய்யனார் மகன் அசோக், 22; மற்றும் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பிரதிவிமங்கலத்தைச் சேர்ந்த திருநங்கை மொபினா, 20; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.