/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
/
சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
ADDED : ஆக 04, 2025 07:07 AM

ரிஷிவந்தியம் : பாவந்துாரில் வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகா, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்,49; இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலான மேல்மலையனுாருக்கு டி.எண்.28 ஏ.பி-2331 என்ற பதிவெண் கொண்ட வேனில் நேற்று முன்தினம் சென்றார். வேனை நாமக்கல் மாவட்டம், மோகலுார் தாலுகா, ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் விமல்குமார்,35; ஓட்டினார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் பாவந்துார் அய்யனார்கோவில் வளைவு பகுதியில் திரும்பிய போது, எதிர்திசையில் வரும் வாகனத்திற்கு வழி விடுவதற்காக விமல்குமார் பிரேக் அடித்துள்ளார்.
அப்போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த செந்தில்குமார்,48; ராம்குமார்,34; லோகநாதன்,63; விமல்குமார்,35; ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.
புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.