/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.4.05 கோடி மதிப்பில் விதை சுத்திகரிப்பு மற்றும் வேளாண் விரிவாக்க மையம்

ADDED : நவ 11, 2024 05:19 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 4.05 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், விதை சேகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் விதை சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டடங்கள் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்ததால், வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மாவட்ட தலைநகரமாகி அனைத்தும் வேளாண் அலுவலகங்களும் வெவ்வேறு பகுதிகளில் தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
எனவே, வலுவிழந்த விதை சுத்திகரிப்பு நிலைய கட்டடங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக 1.05 கோடி ரூபாய் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டப்படுகிறது.
அதன் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பில் 2 தளங்களுடன் கூடிய, புதிதாக மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம்,வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், விதை சான்று அலுவலகங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையமும் கட்டப்பட்டு வருகிறது.
பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் புதிய அலுவலகங்கள் அனைத்தும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இயங்கும் என தெரிகிறது.