sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

/

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன


ADDED : அக் 28, 2025 05:50 AM

Google News

ADDED : அக் 28, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 424 கோரி க்கை மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், வருவாய் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 410 மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 14 மனுக்கள் என மொத்தம் 424 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3,150 மதிப்பிலான காதொலிக் கருவிகள், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வைப்பு நிதி தொகை ரசீது பெற்ற 18 வயது நிறைவடைந்த 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 152 மதிப்பில் முதிர்வு தொகைக்கான வரைவோலை வழங்கப்பட்டன. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us