/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
47 வகையான தொகுப்பு பொருட்கள்
/
47 வகையான தொகுப்பு பொருட்கள்
ADDED : ஜன 05, 2026 05:01 AM
க ள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த மெகா கோலப் போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. அந்த தொகுப்பில், தினமலர் நாளிதழ் காலண்டர், புடவை, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசி பருப்பு, வெல்லம், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம் ஆகிய மளிகை பொருட்களும், பேஸ்ட், சோப்பு, சீக்காய் துாள், பாத்திரம் கழுவும் சோப், சபீனா பவுடர், பீதாபரி பவுடர், விம் பார், பாத்திரம் கழுவும் கம்பி மற்றும் பிளாஸ்டிக் நார்,
சிங் சுத்தம் செய்யும் பிரஷ், துணி துவைக்கும் சோப், பவுடர் மற்றும் லிக்கியூட், லைசால், ஹார்பிக், பினாயில், டாய்லெட் கிளினர், பிளிச் சிங் பவுடர், அந்துருண்டை, பாத்ரூம் கிளினிங் பிரஷ், குப்பை கூடை ஆகிய அடங்கிய 21 வகையான பொருட்களும், வாட்டர் பாட்டில், லேடிஸ் ஹேண்ட் பேக், பென்சில் கிட், மீரா ஷாம்பு, ஒரு கிலோ அரிசி, அரை கிலோ சர்க்கரை, எல்.இ.டி., பல்பு, டவல், டிபன் பாக்ஸ், பிளவுஸ் பிட், மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, மிட்டாய், விசிரி உள்ளிட்ட 47 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. பரிசு தொகுப்பு பொருட்களை எடுத்து செல்ல பெண்கள் பலரும் சிரமப்பட்டனர். போட்டியாளருடன் வந்த பிள்ளைகள், தங்களது தோளில் பொருட்களை துாக்கி சென்றனர்.

