/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் குவிந்தது
/
குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் குவிந்தது
ADDED : டிச 23, 2024 10:37 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 474 மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க கடனுதவி, சாலை வசதி , ஆக்கிரமிப்பு அகற்றுதல், மாற்றுத்திறனாளி உதவி தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மின் விளக்கு அமைத்தல் மற்றும் வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி, கூட்டுறவு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 462 மனு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனு என மொத்தமாக 474 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்வர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.