தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது

பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது

பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் கைது


ADDED : ஆக 15, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவரை தாக்கிய சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, காந்தி ரோட்டை சேர்ந்தவர் 16 வயதுடைய மாணவர், பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை தனது நண்பனின் அண்ணன் 17 வயதுடைய சிறுவன், பள்ளி மாணவரை கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு, மாணவரை, 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷ் ஆகாஷ்வர், 21; ஞானசேகரன் மகன் ஜனார்த்தனன், கண்ணன் மகன் தேவா, 20; கணேஷ் மகன் கவிராஜ், 19; ஆகியோர், தங்களைப் பற்றி ஏன் தவறாக பேசுகிறாய் என கேட்டு, தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த பள்ளி மாணவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மாணவர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என, 5 பேரை கைது செய்தனர்.

இதில் 17 வயது சிறுவன், ஆகாஷ்வர், ஜனார்த்தனன், கவிராஜ் ஆகியோர் கல்லுாரிகளில் படித்து வருவதும், தேவா கூலி வேலை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us