/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 5 பைக்குகள் திருட்டு
/
கள்ளக்குறிச்சியில் 5 பைக்குகள் திருட்டு
ADDED : அக் 23, 2024 08:58 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகள் திருடுபோனது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வாணாபுரம் அடுத்த பெரியக்கொள்ளியூரை சேர்ந்தவர் தாமோதிரன்,34. இவர், (டி.என்15 ஆர் 4158) என்ற பதிவெண் கொண்ட பைக்கில் கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனைக்கு வெளியே பைக்கினை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை.
அதேபோல், மகப்பேறு அரசு மருத்துவமனைக்கு முன் நிறுத்தப்பட்ட மோகூரை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது பைக் (டி.என்15 எக்ஸ் 0285) பாவளத்தை சேர்ந்த முருகன் என்பவரது பைக் (டி.என் 15 பி 6384) சேலம் மெயின்ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு முன் நிறுத்தப்பட்ட தனசேகர் என்பவரது பைக் (டி.என் 32 ஆர் 8650) தனியார் மண்டபத்திற்கு முன் நிறுத்தப்பட்ட முத்தழகன் என்பவரது பைக் (டி.என் 15 ஒய் 9020) ஆகியன திருடுபோனது.
இது குறித்து பைக் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.